Wednesday, 16 January 2019

வாழ்வில் எல்லா துயரங்களும் ஒரு நாள் மாறும் ஆனால் ஒரே நாளில் எல்லாம் மாறி விடாது.

வாழ்வில் எல்லா துயரங்களும் ஒரு நாள் மாறும் ஆனால் ஒரே நாளில் எல்லாம் மாறி விடாது.

தீர்க்க வேண்டியது பிரச்சினைகளை மட்டுமே. பிரச்சினைகளை உருவாக்கியவரை அல்ல.

எதிரிகளும் துரோகிகளும் நிறைந்த உலகத்தில் வாழப் பிடிக்காமல் ஒதுங்கிச் செல்ல தொடங்கினால் இந்த உலகில் உனக்கு இடமே இல்லை. எதிரிகளையும் துரோகிகளையும் சகித்து வாழப் பழகி விட்டால் வாழ்வின் அர்த்தம் புரியும்.

அது என்னமோ தெரியல வாழ்க்கையில நமக்கு எதையெல்லாம் பிடிக்குதோ அதை எல்லாம் வெறுத்து ஒதுக்குற அளவுக்கு எதிர்ப்பு வருது. நமக்கு பிடித்த மாதிரி வாழ்க்கை மாறும் என்று எண்ணிக் கொண்டிருந்த நமக்கு கடைசில நம் எண்ணங்களை தான் மாற்றிக் கொள்ள வேண்டி உள்ளது.

விலகி நின்று வேடிக்கை பார்க்க ஆரம்பித்த பிறகு, வெகு சுவாரசிய நாடகமாக இருக்கிறது வாழ்க்கை.
www.agathiyarjanachithar.in
+91-98428 46104
+91-93818 46104
Email: astrologyiyer@gmail.com

எதை நீங்கள் புரிந்து கொள்ள விரும்புகிறீர்களோ, அதை மட்டுமே நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள். சொல்ல வந்தவர் சொல்வது எல்லாவற்றையும் அல்ல.

வாழ்வில் எல்லா துயரங்களும் ஒரு நாள் மாறும் ஆனால் ஒரே நாளில் எல்லாம் மாறி விடாது.

சிவ சிவ

ஓம் சிவ சங்கர சாம் பசிவா.. ஓம் சிவ சங்கரா, ஓம் சிவ சங்கரா. ஓம் ஜெய சங்கரா சதா சிவா,,, ஓம்நமசிவாய

நெஞ்சில் குடியிருந்து நிழல் கொடுத்து எமையாலும் ஒரு தெய்வம்  நீ தானே ஈஸ்வரா!! ஓம்நமசிவாய

வாழ்க வளமுடன்
நல்லதே நடக்கும்

கும்பமேளா திருவிழா 2019

கும்பமேளா திருவிழா 2019

உத்தரப்பிரதேசம் மாநிலம் பிரயாக்ராஜ் நகரில்,

புனித நீராடலுடன் கும்பமேளா திருவிழா இன்று கோலாகலமாக தொடங்கியது.

உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் கும்பமேளா இன்று அதிகாலை 4 மணிக்குத் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடலுடன் தொடங்கியது. பங்கேற்பதற்காக நாட்டின் பல பகுதிகளில் இருந்து வந்த லட்சக்கணக்கான பக்தர்களும் சாதுக்களும் பிரயாக்ராஜ் நகரில் திரண்டுள்ளனர்.

இன்று தொடங்கி மார்ச் 4ஆம் தேதி வரை நடைபெறும் இந்த விழாவில், உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து, 16 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
www.agathiyarjanachithar.in
+91-98428 46104
+91-93818 46104
Email: astrologyiyer@gmail.com
கும்பமேளாவை முன்னிட்டு, பக்தர்களின் அடிப்படை வசதிக்கான முன்னேற்பாடுகளை உத்தரப்பிரதேசம் மாநில அரசை சேர்ந்த அதிகாரிகளும், மத்திய அரசின் உயரதிகாரிகளும் பல மாதங்களாக திட்டமிட்டு செய்துள்ளனர்.
கும்பமேளாவுக்காக திரளும் பக்தர்களுக்காக கங்கையாற்றங்கரையில் 250 கி.மீ நீளம் கொண்ட

‘கும்ப்நகரி’ என்ற தற்காலிக நகரம் உருவாக்கப்பட்டது. 32 ஆயிரம் ஹெக்டேர் நிலப்பரப்பில் உருவாக்கப்பட்ட இந்த தற்காலிக நகரத்தில் மருத்துவமனைகள், வங்கிகள், காவல் நிலையங்கள், கடை தெருக்கள் போன்றவை அமைக்கப்பட்டுள்ளன.

50 நாள் விழாவாக நடக்கும் இந்த அர்த கும்பமேளா திருவிழாவுக்காக அரசு 4200 கோடி ரூபாய் செலவிடுகிறது. அசம்பாவிதங்களை தடுக்கும் வகையில் நகரின் பல பகுதிகளில் உச்சகட்ட போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இந்த ஜட இயற்கை எனது மேற்பார்வையின் கீழே இயங்குகின்றது.

"ஓம் நமோ ஆதித்யாய புத்திர் பலம் தேஹிமே சதா' என்று காலை சூரியனைப் பார்த்துக் கூறி, மூன்று முறை வணங்க வேண்டும்.

Tuesday, 15 January 2019

ஓம் நமோ நாராயணாயா

ஓம் நமோ நாராயணாயா

சப்த ரிஷிகளில் ஒருவரான நாரதர் எப்பொழுதும் கையில் தம்பூராவுடன்,

" ஓம் நமோ நாராயணாயா:" எனும் மந்திரத்தை சொன்னபடி மூன்று உலகையும் வலம் வருபவர். பக்திக்கு உதாரணமான நாரத முனிவர் பற்றி நமக்கு தெரியும்... ஆனால் அவர் ஏன் அந்த மந்திரத்தை எப்பொழுதும் ஜபிக்கிறார் என தெரியுமா?
ஒரு நாள் வைகுண்டத்தில் ஸ்ரீமன் நாராயணன் அனந்த சயனத்தில் இருந்தார்.

அவரின் பாத கமலத்திற்கு அருகில் மகாலக்ஷ்மி அமர்த்திருந்தார். அங்கு வந்த நாரதர் "பரப்பிரம்ம சொரூபா, அனைவரும் உனது நாமத்தை சொல்கிறார்களே ? அப்படி என்ன இருக்கிறது உனது நாமத்தில்?"

என கேட்டார்.
தேன் சொட்டும் சிரிப்புடன் மஹாவிஷ்ணு நாரதரை பார்த்தார். "நாரதா நாம ஜபத்தின் மகிமையை உனக்கு விளக்குவதை விட, நீயே பரீட்சித்து பார்த்து தெரிந்து கொள். பூலோகம் சென்று தென்திசை தேசத்தில் ஒரு வனம் இருக்கும்.

அங்கு வாழும் ஒரு புழுவிடம் மஹா மந்திரத்தை சொல்." என்றார்.
பரந்தாமன் சொன்ன வனத்தை நோக்கி பயணமானார் நாரதர். அங்கு ஒரு புழு இலையின் மீது ஊர்ந்து கொண்டிருந்தது. அதன் அருகில் சென்று கூறினார் .... " ஓம் நமோ நாராயணாயா:"

உடனே அந்த புழு செத்து விழுந்தது.நாரதர் குழப்பம் அடைந்து வைகுண்டம் சென்றார். "பரமாத்மனே நான் நாமத்தை கூறியதும் அந்த புழு செத்து விழுந்தது. இது தான் உங்கள் நாம மகிமையா? " என கேட்டார் நாரதர்.
மந்தகாச புன்னகையுடன் மாதவன் கூறினார்.."நாரதா மீண்டும் பூலோகம் செல் அங்கு ஒரு பசு மாடு ஒரு கன்றை ஈனும் அதனிடம் சென்று மஹா மந்திரத்தை சொல்" என்கிறார்.

நாரதர் மீண்டும் பூலோகம் வந்தார். அங்கு இவருக்காகவே காத்திருந்ததை போல ஓர் பசு மாடு கன்றை ஈன்றது. கன்றின் அருகில் சென்று கூறினார் .... " ஓம் நமோ நாராயணாயா:"
பிறந்து சில நிமிடங்களே வாழ்ந்த அந்து கன்று கீழே விழுந்து இறந்தது.
www.agathiyarjanachithar.in
+91-98428 46104
+91-93818 46104
Email: astrologyiyer@gmail.com

நாரதர் திடுக்கிட்டார். என்ன ஒரு பாவம் செய்து விட்டோம்?. பசுமாட்டை கொல்வதே மஹா பாவம். இதில் பிறந்து சில கணமேயான கன்றாக இருக்கும் பொழுதே அல்லவா கொன்றுவிட்டோம்.
வைகுண்டத்துக்கு ஓடோடி வந்தார் நாரதர்.

"பிரபோ ...! நான் மஹா பாவம் செய்து விட்டேன். உங்கள் நாமத்தை சொன்னதும் கன்று இறந்து விட்டது. இது என்ன விளையாட்டு? "
"நாரதா கவலை படாதே , மீண்டும் ஒரு முறை பூலோகம் சென்று மஹா மந்திரத்தை சொல். அங்கு ஒரு சிறுவன் விளையாடிக் கொண்டிருப்பான்.

இந்த முறை அவனிடம் சொல்" என்றார் அனைத்தும் அறிந்த அச்சுதன்.
நாரதருக்கோ பயம். ஏற்கனவே இரு முறை பட்ட அநுபவம் அவரை நடுங்க வைத்தது. ஒரு சிறுவன் தன்னால் மடிந்து விடக்கூடாதே என கவலை பட்டார். தைரியத்தை வரவழைத்துக் கொண்டு பூலோகம் வந்தார்.

அங்கு சிறுவன் பொம்மைகளுடன் விளையாடி கொண்டிருந்தான். அவனருகில் சென்ற நாரதர் கூறினார்.... " ஓம் நமோ நாராயணாயா:"
நீங்கள் எதிர்பார்த்தது சரிதான்.. அந்த சிறுவன் நாமத்தை கேட்ட மாத்திரத்தில் இறந்தான்.
நாரதருக்கோ பித்து பிடித்த நிலை அடைந்தார்.

வைகுண்ட வாசன் ஏன் நம் வாழ்கையில் விளையாடுகிறார் என சந்தேகம் கொண்டார்.
மீண்டும் வைகுண்டம் அடைந்தார். அங்கு ஸ்ரீ மந் நாராயணனும் மஹா லக்ஷிமியும் அமர்ந்திருக்க அவர்களின் பாத கமலத்திற்கு அருகில் ஒரு முனிவரும் அமர்ந்து இருந்தார்.

மனம் தடுமாறிய நிலையில் வந்த நாரதரை கண்ட கேசவன் கேட்டார் ," நாரத என்ன ஆயிற்று உனக்கு?" என வினாவினார்.
தனது ஐயத்தை கேட்பதற்கு முன் வைகுண்டத்தில் புதிதாக வந்த முனிவரை குழப்பத்துடன் பார்த்தார் நாரதர்.

பின்பு வைகுண்டவாசனை நோக்கி "ஐயனே இது என்ன சோதனை. நான் மஹா மந்திரம் ஜபிக்கும் இடத்தில் எல்லாம் உயிர்கள் அனைத்தும் இறந்து விடுகின்றன.

பால் மனம் மாறாத பாலகன் அவனும் எனது நாமத்தை கேட்டு இறந்து விட்டான். உங்கள் நாமம் அவளவு கொடுமையானதா ? அல்லது நான் உச்சரித்தது தவறா?" என கேட்டார் பக்திக்கு சூத்திரம் சொன்ன நாரதர்.

வாசுதேவர் நாரதரை பார்த்தார் ," நாரதா நீ சொல்வதிலும் உண்மை இருக்கும் என நினைக்கிறேன். எங்கே என் முன்னாள் ஒரு முறை மஹா மந்திரத்தை கூறு" என்றார்.
அனந்த சயனன் இருக்கும் தைரியத்தில் தனது மனதை திடமாக்கி கண்களை மூடி மீண்டும் ஒருமுறை சொன்னார்.

" ஓம் நமோ நாராயணாயா:"
நாரதர் கண்களை திறந்து பார்த்ததும் , ஸ்ரீ மன் நாராயணனின் பாதத்தில் இருந்த முனிவர் உடலை விடுத்து பரமாத்மாவிடம் சரணடைந்தார். நாரதர் ஒருவித கலக்க நிலை அடைந்தார்.

வரம் அளிக்கும் கரிவரத மூர்த்தியானவர் நாரதரை பார்த்து கூறினார் "....பக்தியின் வடிவமான நாரதா...எனது நாமத்தை உச்சரித்தால் அனைத்து உயிர்களும் முக்தி அடையும். உனது நாமத்தை கேட்டதும் புழு பசுவாகவும், பசு பாலகனகவும்,

மறு பிறப்பை அடைந்தது. பாலகன் மாமுனியாக அவதரித்ததும் மஹா மந்தரத்தால் தான் . கடைசியாக நீமஹா மந்திரத்தை உச்சரித்தும் அந்த மாமுனியும் முக்தி அடைந்தான்....

மஹா மந்திரம் அனைவரையும் முக்தியடைய வைக்கும் சாதனம் என்பதை உணர்த்தவே உன்னை பயன்படுத்தினேன். ... மஹா மந்த்திரத்தை கேட்பவர்களுக்கே முக்தி என்றால் , அதை ஜபிப்பவர்கள அடையும் பயனை எண்ணிப்பார்"

நரதனுக்கு அனைத்தும் புரிந்தது. அன்று முதல் கையில் தம்பூராவுடன் தொடர்ந்து உச்சரிக்க தொடங்கிறார்...
" ஓம் நமோ நாராயணாயா:" ஓம் நமோ நாராயணாயா:" " ஓம் நமோ நாராயணாயா:"

----ஓம்----------------------
இந்த கதையை படிக்கும் சுவாரசியத்தில் உங்களை அறியாமல் எத்தனை முறை மஹா மந்திரம் ஜபித்தீர்கள் பார்த்தீர்களா? உங்களையும் சுற்றி இருக்கும் அனைத்து வஸ்துவையும் வளமாக்கும் ஒரே மந்திரம் மஹா மந்திரமே.

www.agathiyarjanachithar.in
+91-98428 46104
+91-93818 46104
Email: astrologyiyer@gmail.com

மேலும் ஸ்ரீ மந் நாராயணனின் ஸஹஸ்ர நாமத்தில் உள்ள சில பெயர்களை கதையில் சேர்த்தால் ஸஹஸ்ர நாமம் சொன்ன பலனும் கிடைத்தது.
மஹா வாக்கியம் என்றும் பொய்ப்பதில்லை . மந்திர ஜபம் நம்மை நல்கதிக்கு நாரதரை போல கொண்டு செல்லும்.

ஓம் நமோ நாராயணாய

ஸ்ரீ வைஷ்ணவி காயத்ரி
ஓம் தாஷ்யத் வஜாயை வித்மஹே
சக்ர ஹஸ்தாயை தீமஹி
தந்நோ: வைஷ்ணவி ப்ரசோதயாத்

சுக்லாம் பரதரம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்ப்புஜம் ப்ரசன்ன வதனம் த்யாயேத் சர்வ விக்நோப சாந்தயே.

சுக்லாம் பரதரம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்ப்புஜம்
ப்ரசன்ன வதனம் த்யாயேத் சர்வ விக்நோப சாந்தயே.

எல்லாவித தடைகளும் இடையூறுகளும் நீங்கவும்,
மறைந்து போகவும்,
வெள்ளை நிற உடையணிந்து கொண்டிருப்பவரும்,
நான்கு கரங்களை உடையவரும்,
எங்கும் நிறைந்திருக்கும் பரம்பொருளும்,
www.agathiyarjanachithar.in
+91-98428 46104
+91-93818 46104
Email: astrologyiyer@gmail.com

நிலவைப் போன்ற தன்மையுடையவரும்,
எப்பொழுதும் ஆனந்தமயமாக அருட்காட்சியளிக்கும் விநாயகரைத் தியானிப்போம் என்பது இதன் பொருளாகும்.
பிள்ளையாரை வணங்கி நெற்றியில் குட்டிக்கொண்டு எந்த ஒரு காரியத்தையும் ஆரம்பிக்க வேண்டும்.
இது விஷ்ணுசகஸ்ரநாமத்தில் உள்ளது.

"ஓம் நமோ ஆதித்யாய புத்திர் பலம் தேஹிமே சதா' என்று காலை சூரியனைப் பார்த்துக் கூறி, மூன்று முறை வணங்க வேண்டும்.

மனித உருவில் நான் தோன்றும் போது என்னை மூடர்கள் ஏளனம் செய்கின்றனர்

மனித உருவில் நான் தோன்றும் போது என்னை மூடர்கள் ஏளனம் செய்கின்றனர். எனது உன்னத இயற்கையையும், எல்லாவற்றின் மீதுமான எனது   ஆட்சியையும் அவர்கள் அறிய மாட்டார்கள்.

. ஓம்நமசிவாய
நீயே என் தாயும், தந்தையும், நீயே என் உறவும், தோழனும்,, நீயே என் வித்தையும் செல்வமும், எனது தேவ தேவனே,, நீயே எல்லாம் ஓம்நமசிவாய

கொம்பில் அரும் பாய்க் குவி மலராய்க் காயாகி!! வம்பு பழுத்துடலம் மாண்டிங்ஙன் போகாமே!! நம்பு மென் சிந்தை நணுகும் வண்ணம் நானனுகும்!! அம்பொன் குலாத்தில்லை ஆண்டானைக் கொண்டன்றே,, ஓம்நமசிவாய
www.agathiyarjanachithar.in
+91-98428 46104
+91-93818 46104
Email: astrologyiyer@gmail.com
"ஓம் நமோ ஆதித்யாய புத்திர் பலம் தேஹிமே சதா' என்று காலை சூரியனைப் பார்த்துக் கூறி, மூன்று முறை வணங்க வேண்டும்.

பொங்கல் நல்வாழ்த்துகள். 

பொங்கல் நல்வாழ்த்துகள். 

*உயிராய் வந்த தை*

*அ* ன்னமிட விதைத்த *தை*
*ஆ* ழமாய் வயலுழுத *தை*
*இ* ரவுபகல் உழைத்த *தை*
*ஈ* ரமாய் வியர்வை வழிந்த *தை*
*உ* ரமாய் உழைப்ப *தை*
*ஊ* ருக்கெல்லாம் உணவான *தை*

*எ* ருதும் உழவும் வளர்த்த *தை*
*ஏ* ற்றத்தில் நீரிறைத்த *தை*
*ஐ* ம்புலனால் ஐம்பூதத் *தை*
*ஒ* ருங்கிணைத்த உணவ *தை*
*ஓ* ய்வில்லா உழைப்பால *தை*
*ஔ* டதமாய் உணவ *தை*

தை தை யென ஆடி அதை
உயிர்ப்பாய் தந்தேன் வாழ்த்ததை
www.agathiyarjanachithar.in
+91-98428 46104
+91-93818 46104
Email: astrologyiyer@gmail.com

இனிய தைப்பொங்கல் வாழ்த்தும்
இனிய உழவர் திருநாள் வாழ்த்துகள்

நாணயம்

சில்லறை ...

நம் தகுதியும் தரமும் நம் நடத்தையை வைத்தே தீர்மானிக்கப்படும் ...

*தன்வழி யாகத் தழைத்திடும் ஞானமும்*

*தன்வழி யாகத் தழைத்திடும் வையகம்*

*தன்வழி யாகத் தழைத்த பொருளெல்லாம்*

*தன்வழித் தன்னரு ளாகிநின் றானே .*

வெற்றிடம் என்று ஏதுமில்லை ???

வெற்றிடத்தில் இருப்பதை அறியதெரியாதவனே !!

வெற்றிடம் என்கிறான் !!??

சிவபுராணம்

சிவபுராணம் !!*

சுரூசியின் செல்வாக்கு அதிகரிக்க அதிகரிக்க முதல் மனைவியான சநீதிக்கு அநீதிகள் நிகழத்தொடங்கின.

அதாவது அரண்மனையில் வாழ்ந்து கொண்டிருந்த சநீதி அரண்மனையில் இருந்து வெளியேற்றப்பட்டு அரண்மனையின் பின்புறத்தில் வாழ வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. இந்நிலையானது சநீதிக்கு மட்டுமல்லாமல் அவள் வயிற்றில் சுமந்து ஈன்றெடுத்த குழந்தையான துருவனுக்கும் ஏற்பட்டது.

தான் இவ்விதம் ஆதரவற்ற நிலையில் வாழ்ந்து கொண்டிருப்பதை தனது கணவரிடம் எடுத்துரைக்கவும் அல்லது அரசாட்சி புரிந்து வரும் அமைச்சர் முதலான பெரியோர்களிடம் சென்று முறையிடவோ சநீதிக்கு மனம் இடம் அளிக்கவில்லை.

ஏனெனில் அவ்விதம் யாம் நடந்து கொண்டால் தனது கணவருக்கு மற்றவர்கள் மற்றும் பிரஜைகள் மூலம் அவமானங்கள் ஏற்படுவதற்கான சூழல் உண்டாகி அவர் துன்பப்படுவார் என்பதை எண்ணி, தனக்கு ஏற்பட்டுள்ள துன்பங்களை பொறுமையாகவும், நிதானத்துடனும் தனது கணவருடன் இருந்து வந்த நாட்களை எண்ணிக்கொண்டு மனதை சமாதானப்படுத்தி வாழ்ந்து கொண்டிருந்தார்.
www.agathiyarjanachithar.in
+91-98428 46104
+91-93818 46104
Email: astrologyiyer@gmail.com

சிவனின் ஐந்து முகங்கள் நமது ஒவ்வொருவரின் உடலில் இருக்கும் உயிர் வாழ்வதற்கு அடிப்படையாக இருக்கக்கூடியவைகளான ப்ராணன், அபானன், உதானன், வியானன், சமானன் எனும் ஐந்து வாயுக்கள் தெளிவுப்படுத்துகின்றன.

சிவபெருமானுக்கு ஐந்து முகம் மட்டும் அல்லாமல் எவருக்கும் அறியாத ஆறாவதாக ஒரு முகம் இருக்கின்றது. அந்த ஆறாவது முகம் அதோமுகம் என்று அழைக்கப்படுகிறது.

*சத்யோசாதம் முகம் :*

சத்யோசாதம் என்பது ஐந்து முகங்களில் சிவபெருமானின் படைத்தல் பணிபுரியும் முகமாகக் கருதப்படுகின்றது.

இந்த வகை துன்பம் பாலகனான துருவனை சென்றடையா வண்ணம் அவனை கண்ணும் கருத்துமாக வளர்த்து வந்தாள்.

துருவன் அரண்மனையின் உட்புறத்திலேயோ அல்லது முன்பக்கமோ செல்லாத வண்ணம் அவனை கவனித்துக் கொண்டும் வளர்த்து வந்து கொண்டிருந்தார்.

நீயே என் தாயும், தந்தையும், நீயே என் உறவும், தோழனும்,, நீயே என் வித்தையும் செல்வமும், எனது தேவ தேவனே,, நீயே எல்லாம் ஓம்நமசிவாய

*சிவ-சிவ*