Tuesday, 12 February 2019

மனிதனே உன்னுடைய கடைசி நாளான மரண நேரத்தில் கலங்காமல் சஞ்சலப்படாமால் இருக்கனுமா

மனிதனே உன்னுடைய கடைசி நாளான மரண நேரத்தில் கலங்காமல் சஞ்சலப்படாமால் இருக்கனுமா

அப்படியானால் சிலவற்றை மனதில் கொள்

இப்பூவுலகில் மறைந்து போனால் உன்னுடைய இறத்துப்போன உடம்பிற்கு எந்த முக்கியத்துவமும் கொடுக்கப்படாது

உற்றார் உறவினர்கள் உனக்கு செய்ய வேண்டிய இறுதி கடமைகளை செய்வர்

மந்திரம் ஓதி
உனது ஆடைகளை களைவர்
குளிப்பாட்டுவர்
புது துணி அணிவிப்பர்
இது நாள் வரை வாழ்ந்த ( சொந்தமோ வாடகையோ) உன்னுடைய வீட்டை விட்டு வெளியேற்றுவர்
சுடுகாடு / எரிவாயு தகனமேடை என்ற புதிய வீட்டிற்கு எடுத்துச் செல்வர்
அப்போது உனது இறந்த உடலுடன் கூட வரும் பலர் உன்னை அடக்கம் செய்வதில் அல்லது எரிக்க செய்வதில் மட்டும் குறியாக இருப்பர்

மற்றும் சிலர் உனது வாழ்நாளில் ஒரு முறையாவது உனக்கு நல்லதை சொல்லித்தந்து இருக்க மாட்டார்கள் ஆனால் உன் குறைகளை பட்டியலிட்டபடியே உடன் வருவர்

உன்னுடைய பொருட்கள் என நீ இது நாள்வரை பாதுகாத்தது உன்னை விட்டும் பிரிக்கப்படும்

உன்னுடைய சொத்து பெட்டகம்
விலை மதிப்பற்ற புத்தகங்கள்
பணப்பைகள் அசையும் அசையா சொத்துக்கள் மகன் மகள் மனைவி என பல விட்டு போகும்

இன்னொன்றை உறுதியாக விளங்கிக்கொள்

உனது பிரிவால் உனது சுற்றமும் உலகமும் கவலை படாது
உலக பொருளாதாரம் தடைப்படாது
அலுவலகத்தில் உன்னுடைய உத்தியோகத்தின் வேலைக்கு வேறொருவர் வருவார்
இல்லத்தில் உனது சொத்து வாரிசுக்குபோய்விடும்
மனைவி / கணவன் பிள்ளைகளுடன் ஐக்கியமாகி அல்லது இணக்கமாக சென்றுவிடுவர்

ஆனால் அந்த சொத்திற்கு உன்னிடம் எமலோகத்தில் கேள்வி கேட்கப்படும்

நீ மரணித்தவுடன் முதலில் செல்வது உனது பெயர் பட்டம் பதவி செல்வாக்கு எல்லாம் போய் பிரேதம் சவம் பூதவுடல் என பெயர் மாறிவிடும்

எனவே உனது குடும்ப கெளரவம் பட்டம் பதவி அறிவு பணி ஆசாரம் அனுஷ்டானம் ஆராதனம் கைங்கர்யம் என இப்போது அதீத கர்வம் கொண்டு உன்னை ஏமாற்றி கொள்ளவேண்டாம்

இறந்தால் உன்னைப் பற்றிய கவலை யாரும் படமாட்டார்களா எனில்

உன்னை அறிந்தவர்கள் பழகியவர்கள் சொல்வார்கள் ஐயோபாவம் என்று

நண்பர்கள் உறவினர்கள் சில தினங்களுக்கு உன்னை நினைப்பர்
www.agathiyarjanachithar.in
+91-98428 46104
+91-93818 46104
Email: astrologyiyer@gmail.com
உன் குடும்பத்தினர் சில மாதங்கள் மட்டும் உனக்காக கவலைபடுவர்

அதாவது நீ இறந்தவுடன் இதுவரை வாழ்ந்த மக்களுடன் உன்னுடைய தொடர்பு முடிந்து விட்டது இனி வேறொரு வாழ்வு வரும்

நீ இங்கே வாழும் போதே படிப்படியாக உன்னை விட்டு  நீங்கிய பலவற்றை கூறுகிறேன்

முதலில் இளமை உன் அழகு
பிதுர்சொத்து ( அப்பா அம்மா) உடல்ஆரோக்கியம் வலிமை
ஞாபகசக்தி
திருமணத்தில் பிள்ளைகள்
பிள்ளைகள் வாழவேண்டி உன் வீடு அல்லது மாளிகை
வயதான காலத்தில் கட்டிய மனைவி/கணவன்

சரி இதை ஏன் இப்பொது சொல்ல வேண்டும்  காரணம்

உனது ஆத்மா முக்தியடைய எதனை நல்லவையாக ( புண்ணியம் என்பர்) சேர்த்து வைத்து இருக்கிறாய் என்பதே இறுதி வரை வரும் ஒரே சொத்து

எனவே வாழும் போது அருகில் உள்ள
திவ்ய தேசம் செல் அல்லது ஆலயம் செல் பகவத் கைங்கர்யம் செய்
தினமும் பகவத் ஆராதனம் தியானம் செய் படபோகமின்றி இரகசியமாக தேவைபடுவோர்க்கு தர்மம் செய்

நான் பெரியவன் உயர்ந்தவன் பண்டிதன் ஆன்மீகவாதி ஆசாரசீலர் என கர்வமோ அகம்பாவமோ கொண்டு பிறரை நிந்திக்காதே

நேரம் கிடைக்கும் போது உன் ஆசாரியரை அல்லது அவரது வழி தோன்றலை கண்டு அடிபணிந்து அவருக்கு தேவையான பணிவிடைகளை அல்லது பிரியமானதை செய்

என்றும் எப்போதும் மனத்தளவில் பகவத் நாமாவை சொல் நல்ல வார்த்தை பேசு

ஆசாரியனை மனத்தில் இருத்தி நல்லவைகளை சிந்தனை செய்

வாழும் நாளில் பிறருக்கு மட்டுமல்ல உன் குடும்பத்திற்க்கும் உறவுக்கும் நல்ல செயல்களையே செய்

உறவுகள் நட்புகள் உடன் வசிப்பவர்கள் பயணிப்பவர்கள் என யாருக்கும் கெடுதல் செய்யாதே
www.agathiyarjanachithar.in
+91-98428 46104
+91-93818 46104
Email: astrologyiyer@gmail.com
இப்படியாக வாழ்ந்தால் உன் மரணத்தை கண்டு நீ பயப்படதேவை இல்லை

மறைந்ததா யிருந்திடும் நிறைந்தெனு ளிருந்ததை மறந்தன் றிருந்தால் இறந்ததா யிருந்தவன், சிறந்ததா யிருந்திடும் சிதம்பர நாதனை சிந்தையில் கொண்டதா லின்றே பிறந்ததா யுணர்கிறேன்... ஓம்நமசிவாய